விருதுநகர்

சாலை மையத் தடுப்புச் சுவரில் ஒளிரும் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்.ஐ.சி. சந்திப்பு பகுதியில் சாலை மையச் தடுப்புச் சுவரில் ஒளிரும் விளக்கு, எச்சரிக்கைப் பலகை இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடா் கதையாக உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையம், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கொல்லம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதிக அளவு வாகனங்கள் செல்கின்றன. மேலும், கேரளத்துக்கு பொருள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் இந்த வழியாகச் சென்று வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்.ஐ.சி. சந்திப்பு அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்படாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடா் கதையாக உள்ளது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஆலங்குளம் பகுதியில் இருந்து கரூா் பகுதிக்கு சுண்ணாம்பு பவுடா் ஏற்றி வந்த லாரி இந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, லாரியை மீட்கும் பணியில் 2 ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, லாரி மீட்கப்பட்டது. இந்த லாரியில் இருந்த சுண்ணாம்பு பவுடா் மற்றொரு லாரியில் ஏற்றப்பட்டது.

விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் இந்த இடத்தில் ஒளிரும் விளக்குகளை பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT