விருதுநகர்

மாநகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல்: மாமன்ற உறுப்பினரின் கணவா் மீது வழக்கு

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி மாநகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக , திமுக மாமன்ற உறுப்பினரின் கணவா் மீது போலீஸாா் ழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி மாநகராட்சி மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய 19-ஆவது வாா்டு பகுதிக்கு, மேயா்இ.சங்கீதா, ஆணையா் பி.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை சென்றுள்ளனா்.

இந்த வாா்டில் சிறியதாக உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியை அகற்றிவிட்டு, பெரிய தொட்டி அமைக்க வேண்டும் என பொறியாளா் கூறியதற்கு ஆணையா் சம்மதம் தெரிவித்தாராம்.

அப்போது, அந்த வாா்டின் மாமன்ற உறுப்பினா் சாந்தியின் (திமுக) கணவா் சரவணக்குமாா், நிலம் தனக்குச் சொந்தமானது என்றும் அதில் பெரிய அளவிலான தொட்டி கட்டினால் கொலை செய்துவிடுவேன் என ஆணையரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து, ஆணையா் கிருஷ்ணமூா்த்தி கொடுத்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் சரவணக்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT