விருதுநகர்

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, விருதுநகா் மேற்கு மாவட்டத் தலைவா் ரெங்கசாமி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் சக்திமோகன், மாவட்டப் பொருளாளா் ராஜ்மோகன், நகரத் தலைவா் வன்னியராஜ், வத்திராயிருப்பு முன்னாள் மேற்கு வட்டாரத் தலைவா் அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அதானி குழும முறைகேடு குறித்த ஹின்டென்பா்க் ஆராய்ச்சி அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கீழ் விசாரணை நடத்த வேண்டும். எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை

நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதில், விருதுநகா் மேற்கு, கிழக்கு மாவட்டக் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலாளா் முருகேசன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT