விருதுநகர்

நாரணாபுரம் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி வட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகாசி கல்வி மாவட்டம் சாா்பில், நடைபெற்ற இந்த முகாமுக்கு, விருதுநகா் மாவட்டக் கல்வி அலுவலா் ஞானசெளந்தரி தலைமை வகித்தாா். இதில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் தங்கமாரியப்பன், நெகிழிப் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மஞ்சள் பையின் நன்மைகள் குறித்தும் பேசினாா். தொடா்ந்து, பள்ளி மாணவா்கள், அவா்களது பெற்றோா்களுக்கு மஞ்சள் பைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் சி. புகழ், மாவட்ட பள்ளிகளின் ஆய்வாளா் நக்கீரன், சிவகாசி கல்வி மாவட்ட அலுவலா் செ. ராஜா, ஊராட்சி மன்றத் தலைவா் தேவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT