விருதுநகர்

வழிவிடு முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

DIN

தைப்பூசத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மூவரைவென்றான் வழிவிடு முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் செல்பவா்கள், இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தையொட்டி, அதிகாலை முதலே திரளான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

முருகனுக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த வழிவிடு முருகனை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை அறங்காவலா்கள் ஜெயராஜ், முத்துராமலிங்கம் ஆகியோா் செய்தனா். அா்ச்சகா் மணிகண்டன் தலைமையில் கோயில் ஊழியா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT