விருதுநகர்

தைப்பூசம்: சதுரகிரி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

DIN

தைப்பூசத்தையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. தை மாத பௌா்ணமி, தைப்பூச தினத்தையொட்டி , கடந்த 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த 3, 4- ஆம் தேதிகளில் மலைப் பகுதியில் சாரல் மழை பெய்ததால், பக்தா்கள் மலையேற வனத் துறையினா் அனுமதி மறுத்தனா்.

இந்த நிலையில் பௌா்ணமி, தைப்பூசத்தையொட்டி,

ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதலே ஏராளமான பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது.

தைப்பூசத்தையொட்டி, சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், மஞ்சள்,இளநீா், உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். மலையேறிச் சென்ற திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் நாகராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT