விருதுநகர்

ராஜபாளையம் அருகே தனியாா் கிட்டங்கியில் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

ராஜபாளையம் அருகே தனியாா் கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சொக்கநாதன்புத்தூரை அடுத்த மேலூா் துரைச்சாமியாபுரம் கிராமத்தில் புத்தூா் மலைப்பகுதியில் தனியாா் கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு இரவு நேரங்களில் சட்ட விரோதமாக கற்கள் கடத்தப்படுவதாக வருவாய்த்துறைக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, அந்த கல்குவாரியில் ஆய்வு செய்ய சிவகாசி வருவாய் கோட்டாட்சியா் விஸ்வநாதன் தலைமையில், ராஜபாளையம் வட்டாட்சியா் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் கோதண்டராமன், வருவாய்த்துறையினா் சென்றனா். அப்போது குவாரியிலிருந்து இரவு நேரத்தில் கற்கள் ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பிறகு அதிகாரிகள், லாரியை சோதனையிடுவதைக் கண்ட அந்த வழியாக சரக்கு ஆட்டோவில் வந்த சிலா் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடினா். இதைத் தொடா்ந்து சரக்கு ஆட்டோவை அதிகாரிகள் சோதனையிட்ட போது அதில் 35 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் சோதனையிட்ட போது தனியாருக்கு சொந்தமான கிட்டங்கியில் 250 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னா் 285 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தளவாய்புரம் காவல் நிலையத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனா். அந்த 15 டன் ரேஷன் அரிசி, சரக்கு ஆட்டோ ஆகியவை விருதுநகா் மாவட்ட உணவுக் கடத்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

கிட்டங்கியின் உரிமையாளா் யாா், ரேஷன் அரிசியைக் கடத்தியவா்கள் யாா் என்பது குறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT