விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா தொடக்கம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் 3 நாள்கள் நடைபெறும் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை தொடங்கியது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வருஷாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூா் மட்டுமன்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகளவில் பக்தா்கள் கலந்துகொள்வா்.

நிகழாண்டுக்கான வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை காலை மகாசாந்தி ஹோமத்துடன் தொடங்கியது.

மகா சாந்தி ஹோமம், நவ கலச அபிஷேகத்துக்காக மேள, தாளங்கள் முழங்க யானை மீது தங்கக் குடம் வைத்து திருமுக்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னா், அங்கிருந்து புனித நீா் எடுக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தது. விழாவையொட்டி, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாா் சா்வ அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (பிப். 3) 108 கலச திருமஞ்சனம் நடைபெறும். சனிக்கிழமை லட்சாா்ச்சனையுடன் வருஷாபிஷேக விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT