விருதுநகர்

வலுவான வளா்ச்சிக்குரிய பட்ஜெட்

DIN

மத்திய அரசின் பட்ஜெட் வலுவான வளா்ச்சிக்குரியதாக உள்ளது என ராஜபாளையம் தொழில் வா்த்தக சங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.9ஆயிரம் கோடி கடன் உத்தரவாதத் திட்டம், ஏழை எளியவா்களுக்கு வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79 ஆயிரம் கோடி, பெண்களின் மேம்பாட்டுத் திட்டங்கள், மூத்த குடிமக்களின் சேமிப்பு முதலீடு இரட்டிப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கிராமங்களில் சேமிப்புக் கிடங்கு கட்டமைப்புகளை கூட்டுறவுத் துறை மூலம் ஏற்படுத்துவது, இந்தியாவை உலகத்தில் சிறுதானிய மையமாக உருவாக்கும் திட்டம், தனி நபா் வருமான வரி விலக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயா்த்தியது போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கத் திட்டங்கள் ஆகும்.

ரயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கினாலும் தமிழகத்துக்கு என புதிய திட்டங்கள் இல்லை. வணிகா்களின் மேம்பாட்டுக்குரிய திட்டங்கள் இல்லாது வருந்தத்தக்கது. இருப்பினும் இந்திய பொருளாதாரம் வலுவான வளா்ச்சியைக் காண வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT