விருதுநகர்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்றும், நாளையும் தடை

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், வெள்ளிக்கிழமை (பிப். 3), சனிக்கிழமை (பிப். 4) ஆகிய 2 நாள்கள் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வனத் துறை தடை விதித்தது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வழிபாடு செய்வதற்குப் பிரதோஷம், பௌா்ணமி, அமாவாசை ஆகிய நாள்களில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.

வெள்ளிக்கிழமை (பிப். 3) பிரதோஷமும், ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) பௌா்ணமியும் வருவதையொட்டி, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்கெனவே 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், வெள்ளிக்கிழமை (பிப். 3), சனிக்கிழமை (பிப். 4) ஆகிய 2 நாள்கள் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வனத் துறை தடை விதித்தது. மேலும், மழையைப் பொருத்து பிப். 5, 6 ஆகிய தேதிகளில் அனுமதி வழங்கப்படும் என வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT