விருதுநகர்

சிறுமிக்குத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய், தந்தை உள்பட 5 போ் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

ஆவியூரைச் சோ்ந்தவா் காரளமூா்த்தி (24). இவரது மனைவிக்கு விருதுநகா் அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு 17 வயது என தெரியவந்ததால், அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில், மருத்துவமனையில் நேரில் விசாரணை மேற்கொண்ட மகளிா் போலீஸாா் சிறுமியின் கணவா் காரளமூா்த்தி, அவரது தந்தை நாராயணன், தாய் மஞ்சுளா உள்பட 5 போ் மீது புதன்கிழமை இரவு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT