விருதுநகர்

வீட்டில் பட்டாசு தயாரித்தவா் கைது

2nd Feb 2023 12:08 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் பேரில், புதன்கிழமை வெம்பக்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் வெற்றிமுருகன் உள்ளிட்ட போலீஸாா் விஜயகரிசல்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் விஜயகரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த சங்கையா (45) என்பவரது வீட்டின் அருகே அனுமதி இல்லாமல், எளிதில் தீப்பற்றக்கூடிய மருந்து செலுத்திய வெள்ளைத் திரிகள், மருந்து செலுத்தப்பட்ட சோல்சா வளையம் ஆகியவை வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, வெடி மருந்துப் பொருள்களைக் கைப்பற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT