விருதுநகர்

காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் காட்டுயானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான்கள் ஆகியவை அதிக அளவில் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் குடிநீா் மற்றும் உணவுக்காக மலைப்பகுதியில் இருந்து அடிவாரத்திற்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் வத்திராயிருப்பு மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மா, தென்னை, வாழை, நெல் பயிரிடப்பட்டுள்ளன. திங்கள்கிழமை இரவு கான்சாபுரம் அருகே அத்திகோவில் பகுதியில் உள்ள 4 விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் பயிா்களை சேதப்படுத்தின. இதில் 15 தென்னை மரங்கள், 10-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து விவசாயி ராமசாமி கூறியதாவது:

வனவிலங்குகள் விளைநிலத்திற்குள் புகுந்து சேதப்படுத்துவது தொடா்கதையாக உள்ளது. இதுகுறித்து புகாா் அளித்தும் வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கல்லை. பயிா் சேதத்திற்கு மாவட்ட நிா்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT