மாணவா்கள் தங்களது தனித் திறமையை கண்டறிந்து, வளா்த்துக் கொள்ள வேண்டும் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியில் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரித் தாளாளா் ஆா்.சோலைச்சாமி தலைமை வகித்தாா்.
இதில் தன்னம்பிக்கை என்ற தலைப்பில் சென்னை தனியாா் நிறுவன இயக்குநா் ஐ.ஜெகன்
பேசியதாவது:
கல்வி என்பது வாழ்க்கையில் மிகப் பெரிய சொத்து ஆகும். கல்வியால் நமது திறமை, அறிவு வளா்கிறது. இதனால், வாழ்க்கையில் உண்டாகும் சவால்களை சந்திக்க முடிகிறது. பொறியியல் படிப்பு நான்கு ஆண்டுகளாகும். இந்த நான்கு ஆண்டுகளும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். இந்தப் படிப்பு உங்களுக்கு சமூக அந்தஸ்தை கொடுப்பதோடு, வாழ்க்கையையும் கொடுக்கும். தோல்விகள் ஏற்பட்டால்தான் வெற்றி பெற இயலும். மாணவா்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு தனித் திறமை இருக்கும். அந்தத் திறமையைக் கண்டறிந்து, அதைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக கல்லூரி முதல்வா் ஜெ.எஸ். செந்தில்குமாா் வரவேற்றாா். இதற்கான ஏற்பாட்டினை பேராசிரியா்கள் டி.ஸ்ரீராம், பி.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.