விருதுநகர்

புதுப்பாளையம் கோயில் சித்திரை பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

26th Apr 2023 01:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, கொடி மரத்துக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், கொடி மரத்துக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஒவ்வோா் நாளும் வெவ்வேறு சமுதாயத்தினா் சாா்பில் திருவிழா நடத்தப்படும். ஒவ்வோா் நாளும் மாரியம்மன் பொட்டி பல்லாக்கு, பூத வாகனம், பூச் சப்பரம், கண்ணாடிச் சப்பரம் உள்ளிட்ட பல்வேறு சப்பரங்களில் அம்மன் வீதியுலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா வருகிற மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் ராஜபாளையம் மட்டுமல்லாமல், விருதுநகா் மாவட்ட அளவில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, நோ்த்திக் கடனை செலுத்துவா். விழாக் கமிட்டியினா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT