விருதுநகர்

நாட்டாண்மையை தாக்கிய கூலித் தொழிலாளி கைது

26th Apr 2023 12:55 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே ஊா் நாட்டாண்மையைத் தாக்கியதாக கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள கிளியம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (44). இவா் ஊா் நாட்டாண்மையாக இருந்து வருகிறாா்.

ஊரில் கோயில் திருவிழா நடத்துவதற்காக பொன்ராஜ், தனது உதவியாளா் சரவணனுடன் வரி வசூல் செய்து வந்தாா்.

சரவணனுக்கும் அதே ஊரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி காசிராஜனுக்கும் (19) முன்விரோதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், பொன்ராஜும் சரவணனும் ஊரில் உள்ள கலையரங்கம் பகுதியில் நடந்து சென்றபோது,

காசிராஜன் வழிமறித்து, இருவரையும் தாக்கினாா்.

இது குறித்த புகாரின் பேரில், மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காசிராஜனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT