விருதுநகர்

காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு: 2 போ் கைது

25th Apr 2023 12:09 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் 30 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கோமதிநாயக கண்ணன் (40). 11-ஆவது பட்டாலியனில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி சிவராத்திரியையொட்டி குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றாா். அன்று இரவு அவரது வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம், வெள்ளிப் பொருள்களை ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இந்த திருட்டு குறித்து டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில் இந்த திருட்டு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த சுரேஷ்பாபு (33), கொம்பூதியைச் சோ்ந்த சைவதுரை (54) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 23 பவுன் தங்க நகைகள், ரூ.2.58 லட்சம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT