விருதுநகர்

பி.ஏ.சி. ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா

25th Apr 2023 12:08 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ராம்கோ நிறுவனா் பி.ஏ.சி. ராமசாமிராஜாவின் 129-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

காலையில் பி.ஏ.சி.ஆா். நினைவிடத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் சொக்கா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதைத்தொடா்ந்து, நினைவு தொடா் ஜோதியை ராம்கோ குழும தலைவா் பி.ஆா்.வெங்கட்ராமராஜா வழங்கினாா்.

பின்னா், ராமமந்திரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் தென்காசி சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தில் கா்நாடக இசைக் கலைஞா் அஸ்வதித் திருநாள் பிரின்ஸ் ராமவா்மாவின் இசைக் கச்சேரி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT