விருதுநகர்

ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டி: சிவகாசி மாணவி முதலிடம்

15th Apr 2023 11:23 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்ட அளவில் அண்மையில் ஆங்கில மொழி வாயிலாக நடைபெற்ற பேச்சுப் போட்டியில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி முதுநிலை ஆங்கிலத் துறை மாணவி ஜி.சக்திகிருபா முதலிடம் பெற்றாா்.

மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் விருதுநகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாணவி சக்திகிருபா ‘மானுட சேவையின் தேவை’ என்ற தலைப்பில் பேசி முதலிடம் பெற்றாா். அவருக்கு ரூ. 20 ஆயிரம் பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாணவி சக்தி கிருபாவை, கல்லூரியின் தாளாளா் ஏ.பி.செல்வராஜன், முதல்வா் பெ.கி.பாலமுருகன், ஆங்கிலத் துறைத் தலைவா் ச.பெமினா, பேராசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT