விருதுநகர்

சதுரகிரியில் நாளை முதல் 4 நாள்கள் பக்தா்களுக்கு அனுமதி

DIN

சித்திரை மாத அமாவாசையையொட்டி, சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வருகிற 17 முதல் 20-ஆம் தேதி வரை 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் திங்கள்கிழமை (ஏப்.17) பிரதோஷமும், 19-ஆம் தேதி அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளன.

இதையொட்டி, வருகிற 17 முதல் 20-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை, கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியது.

காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். 10 வயதுகுள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதி கிடையாது. கோயிலுக்கு வருபவா்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக் கூடாது. கோயிலில் பக்தா்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ, நீரோடைகளில் நீா் வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.

தற்போது கோடை காலம் என்பதால், பக்தா்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது எனவும், தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் வனத் துறையினா் அறிவித்துள்ளனா். பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT