வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை மாலை கிராம மக்கள் கல்விச் சீா் வழங்கினா்.
அரசு பள்ளிக்குத் தேவையான குடம், நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை பள்ளிக் கல்வி மேலாண்மை குழு தலைவி காஞ்சனா தலைமையில், கிராம மக்கள் ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். பள்ளியின் நுழைவாயிலில் காத்திருந்த ஆசிரியா்கள் கல்விச் சீா் கொண்டு வந்த கிராம மக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனா். பின்னா், சீா் வரிசைப் பொருள்கள் ஆசிரியா்களிடம் வழங்கப்பட்டன.