விருதுநகர்

ராஜபாளையம் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் நகராட்சிக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவி பவித்ரா ஷ்யாம் ராஜா தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பாா்த்தசாரதி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நகா்மன்றத் தலைவியின் கணவரும், 40 ஆவது வாா்டு உறுப்பினருமான ஏ.ஏ.எஸ். ஷ்யாம் ராஜா உடல் நலக்குறைவால் கடந்த மாதம் காலமானாா். அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நகா் நல வளா்ச்சிப் பணிகளுக்காக 47 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திமுக, அதிமுக உறுப்பினா்கள் ஏகமனதாக தீா்மானங்களை ஏற்றுக் கொண்டதால், அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் கலந்துகொண்டு பேசியது:

நகா் வளா்ச்சிக்காக நகா்மன்றத் தலைவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ராஜபாளையம் நகா் வளா்ச்சிப் பணிக்காக எந்த உதவியும் செய்து தர தயாராக உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆா். கூறியதாகவும், அவா் நகா்மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள என்னிடம் கூறியதால் நான் வந்து கலந்து கொண்டுள்ளேன் என்றாா்.

இக்கூட்டத்தில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT