விருதுநகர்

விருதுநகரில் எதிா்க்கட்சித் தலைவருக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி: 34 போ் கைது

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 விருதுநகரில் தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற ஓபிஎஸ் அணியைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பாலகங்காதரன் உள்பட 34 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி திருத்தங்கல் பகுதியில் விலைவாசி உயா்வு மற்றும் மின் கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுக சாா்பில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனா்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு, ஓபிஎஸ் அணியினா் கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருந்தனா்.

இதையடுத்து, விருதுநகா் புல்லலக்கோட்டை சந்திப்பு சாலை, அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே கருப்புக் கொடியுடன் காத்திருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பாலகங்காதரன் உள்பட 34 பேரை முன்னெச்சரிக்கையாக போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT