விருதுநகர்

சிவகாசியில் இன்று அதிமுக பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறாா்

29th Sep 2022 02:19 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் விலைவாசி உயா்வு, மின்கட்டண உயா்வு உள்ளிட்டவைகளைக் கண்டித்து அதிமுக சாா்பில் வியாழக்கிழமை (செப். 29) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கவுள்ளாா்.

விருதுநகா் மாவட்ட மேற்கு அதிமுக சாா்பில் நடைபெற உள்ள இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா். இந்த பொதுக்கூட்டம் திருத்தங்கல் - செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு நடைபெற்று வரும் பணிகளை விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சா்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆா்.பி. உதயக்குமாா் உள்ளிட்டோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT