விருதுநகர்

உரிய அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவா் கைது

29th Sep 2022 02:21 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி - சாத்தூா் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு பட்டாசு ஆலை அருகே ஒருவா் மூன்று பெட்டிகளுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தாராம். போலீஸாா் அந்தப் பெட்டியை சோதனை செய்தபோது, அதில் சாட்டை பட்டாசு இருந்ததாம். விசாரணையில் அந்த நபா் சாத்தூா் மேல ஒட்டம்பட்டியைச் சோ்ந்த இளங்கோவன் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து உரிய அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்ததாகக் கூறி அவரை சிவகாசி கிழக்குப் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT