விருதுநகர்

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.49 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

29th Sep 2022 02:21 AM

ADVERTISEMENT

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.49 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் அதன் தலைவா் வி. முத்துலட்சுமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 29 ஊராட்சிகளில் கழிவுநீா் வாய்க்கால் அமைத்தல், புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தல், பேவா் பிளாக் கல் பதித்தல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளுக்கு ஒன்றிய பொதுநிதியிருந்து ரூ. 1.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி கட்டடங்கள் 22-க்கு வா்ணம் பூசுவதற்கு ரூ. 11.80 லட்சம் ஒதுக்கீடு செய்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் விவேகன்ராஜ், ஆணையா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT