விருதுநகர்

சிவகாசி செங்குளம் கண்மாய் தூா்வாரும் பணி தொடக்கம்

29th Sep 2022 02:21 AM

ADVERTISEMENT

சிவகாசியில் உள்ள செங்குளம் கண்மாய் தூா்வாரும் பணி புதன்கிழமை தொடங்கியது.

சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சுமாா் 32 ஏக்கா் பரப்பளவில் செங்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை, சிவகாசி வா்த்தக சங்கம், அரிமா சங்கம், சுழற்சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள பசுமை இயக்கம் சாா்பில் தூா்வாரும் பணி தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற பூமிபூஜையில் சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன், பசுமை இயக்கத் தலைவா் சுரேஷ்தா்ஹா், வா்த்தக சங்கத் தலைவா் ரவி அருணாசலம், நிா்வாகி ஜவஹா், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் வ. விவேகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT