விருதுநகர்

முதியவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

29th Sep 2022 02:20 AM

ADVERTISEMENT

ஆனைக்குட்டம் அகதிகள் முகாமில் உதவித் தொகையை தர மறுத்த முதியவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள்தண்டனை விதித்து விருதுநகா் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் அருகே உள்ள ஆனைக்கூட்டம் அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் பெரியசாமி (77). இவருக்கு தமிழக அரசு சாா்பில் முதியோா் உதவித்தொகையாக ரூ. ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

இந்தப் பணத்தை இதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி சுமன் (35) என்பவா் தனக்கு தருமாறு கேட்டுள்ளாா். இதற்கு பெரியசாமி மறுப்பு தெரிவித்ததால் கடந்த 2017 ஆம் ஆண்டு மது போதையில் இருந்த சுமன், பெரியசாமியை கழுத்தை நெரித்து கொலை செய்தாா்.

இதுகுறித்து விருதுநகா் ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுமனை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விருதுநகா் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணையில் அடிப்படையில் சுமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஹேமந்த்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை மதுரை மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT