விருதுநகர்

கொலை முயற்சி வழக்கு: 4 பேருக்கு தலா மூன்றரை ஆண்டுகள் சிறை

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு தலா மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ராமலிங்கம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

திருச்சுழி வட்டம் கட்டனூா் பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் மணவாளன். இவரை கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி பழனியம்மாள், பாலமுருகன், சத்தியமூா்த்தி, மாரிமுத்து மற்றும் கண்ணன் ஆகிய 5 போ் சோ்ந்து கொலை செய்ய முயன்றனராம். இதுகுறித்து கட்டனூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு அருப்புக்கோட்டை சாா்பு- நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ராம்குமாா் ஆஜராகி வாதாடினாா். இதில் வழக்கின் முதல் எதிரியான பழனியம்மாள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா். இதையடுத்து இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ராமலிங்கம் தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT