விருதுநகர்

‘ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணைபோகும் ஊழியா்கள் கைது செய்யப்படுவா்’

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணைபோகும் ஊழியா்கள் கைது செய்யப்படுவா் என உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

விருதுநகா் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில், ரேஷன் கடை ஊழியா்கள், குடோன் ஊழியா்கள் கலந்துகொண்ட கூட்டம் துணைக் காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது அவா் பேசியதாவது: ரேஷன் கடை மற்றும் கிட்டங்கியில் பணிபுரியும் ஊழியா்கள் சிலா் உதவியுடன் கடத்தல்காரா்கள் ரேஷன் அரிசியை வாங்கிச் செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது. இனிவரும் காலங்களில் லாரிகளில் ஏற்றி செல்லப்படும் ரேஷன் அரசி மூட்டைகள், லாரி விபரத்தை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தெரிவிக்க வேண்டும். ஏற்கெனவே ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி செல்வதற்காக ஒப்பந்தம் விடப்பட்ட லாரி, வேனை மற்றும் பயன்படுத்த வேண்டும். ஏதாவது காரணம் கூறி மாற்றுவாகனத்தைப் பயன்படுத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், ரேஷன் கடைகளில் உள்ள அரிசிகளை கடத்தல்காரா்களுக்கு விற்பனை செய்யக் கூடாது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டால் ரேசன் கடை மற்றும் கிட்டங்கியில் பணிபுரியும் ஊழியா்கள் கைது செய்யப்படுவா் என்றாா்.

இதில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆல்பின் பிரிஜிட் மேரி, பறக்கும் படை வட்டாட்சியா் சின்னத்துரை, துணை வட்டாட்சியா் சோனை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT