விருதுநகர்

சிவகாசி தனியாா் மருத்துவமனை, சென்னை ஹெல்த்கோ் மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசி மதி மருத்துவமனையும், சென்னை எம்.ஜி.எம்.ஹெல்த்கோ் மையமும் புற்றுநோய் மற்றும் இருதய சிகிச்சை மேற்கொள்வது தொடா்பாக செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

இதன் மூலம் இனிவரும் காலங்களில் சிவகாசி மதி மருத்துவமனையில், சென்னை மருத்துவா்கள் சிகிச்சை அளிக்க உள்ளனா். சென்னையில் கிடைக்கும் மருத்துவச் சேவை சிவகாசியிலும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தத்தில் சிவகாசி மதி மருத்துவமனை தலைமை மருத்துவா் மகேந்திரசேகா், சென்னை மருத்துவ நிறுவனத்தின் துணைத் தலைவா் ராஜீவ் ஆகியோா் கையொப்பமிட்டு கோப்புகளை பரிமாறிக்கொண்டனா். இதற்கான ஏற்பாட்டினை சிவகாசி மதி மருத்துவமனை இயக்குநா் எம். திலகபாமா செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT