விருதுநகர்

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட தமிழக அரசு தனி சிறப்புச் சட்டம் இயற்றக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் ஜவகா் மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினா் ஜெகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே. முருகன் சிறப்புரையாற்றினாா். கோரிக்கைகளை விளக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி துணைச் செயலாளா் ஊமைத்துரை, ஆதித் தமிழா் பேரவையின் மாவட்ட அமைப்புச் செயலாளா் மைக்கேல் மற்றும் தேவேந்திர சமூக பாதுகாப்புக் கூட்டமைப்பு தா்மராஜ் ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினா்கள் சிவஞானம், கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT