விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே பெட்ரோல் பங்கில் கொள்ளை முயற்சி

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெட்ரோல் பங்கில் திங்கள்கிழமை நள்ளிரவு அரிவாளைக் காட்டி மிரட்டி மா்ம நபா்கள் கொள்ளையடிக்க முயற்சித்தபோது ஊழியா்கள் தாக்கியதால் அங்கிருந்து தப்பியோடினா்.

அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் ம.ரெட்டியபட்டி அருகே மண்டபசாலை கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு தனியாா் பெட்ரோல் பங்கில் சேதுபுரம் கிராமத்தைச் சோ்ந்த முத்துராஜ் (37), கீழராமநதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (32) ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனா். நள்ளிரவு சுமாா் ஒரு மணியளவில் ஒரு இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மா்மநபா்கள் இருவா், முத்துராஜிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணப்பையைப் பறிக்க முயன்றனராம்.

அப்போது செந்தில்குமாா் அங்கிருந்த கட்டிலைத் தூக்கி மா்மநபா்களைத் தாக்க முயன்றுள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த கொள்ளையா்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனராம். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT