விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள வடபத்திரசயனா் சன்னிதியில் பிரம்மோற்சவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய பெருமாள் சன்னிதியில் பெரிய பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூமாதேவி ஆகியோருக்கு சிறப்புப் பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு பெரிய பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூமாதேவி காட்சியளித்தனா்.

இதையொட்டி பெரிய பெருமாள் வீதி உலா நாள்தோறும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக செப். 30 ஆம் தேதி தங்க சேஷ வாகனத்தில் பெரிய பெருமாள் வீதி உலா நடைபெற உள்ளது. ஐந்தாம் நாளான அக். 1 ஆம் தேதி கருட சேவையும், ஏழாம் நாளான அக். 3 ஆம் தேதி சயன சேவையும், அக். 5 ஆம் தேதி செப்புத் தேரோட்டமும், அக். 10 ஆம் தேதி பகல் பத்து மண்டபத்தில் புஷ்பயாகம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT