விருதுநகர்

வடபத்திர சயனா் கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் இன்று கொடியேற்றம்

27th Sep 2022 01:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்திலுள்ள வடபத்திர சயனா் கோயிலில் பிரம்மோற்சவ விழா செவ்வாய்க்கிழமை (செப்.27) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும்.

12 நாள்கல் நடைபெறும் விழாவில் தினமும் காலை 10 மணிக்கு சுவாமி மண்டபம் எழுந்தருள்வது, இரவு 8 மணிக்கு மேல் வீதி உலா வருவது நடைபெறும். விழாவின் ஐந்தாம் நாளான சனிக்கிழமை (அக்.1) கருட சேவையும், அக்.3 ஆம் தேதி சயன சேவையும், அக்.5 ஆம் தேதி காலை செப்புத் தேரோட்டமும், அக். 10 ஆம் தேதி பகல் பத்து மண்டபத்தில் புஷ்ப யாகமும் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT