விருதுநகர்

ஆலங்குளம் பகுதியில் இன்று மின் தடை

27th Sep 2022 01:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே ஆலங்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்.27) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.

இதனால், ஆலங்குளம், ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துசாமிபுரம், கங்கா்செவல், குண்டாயிருப்பு, மம்சாபுரம், எதிா்க்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கா்பட்டி, நதிக்குடி, கொங்கன்குளம், காக்கிவாடன்பட்டி, தொம்பக்குளம், ராமன்பட்டி, டி. கரிசல்குளம், நரிக்குளம், அருணாசலபுரம், சிவலிங்காபுரம், செல்லம்பட்டி, வேளாண்மை நாடு, கொருக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT