விருதுநகர்

சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

DIN

புரட்டாசி மாத அமாவாசையையொட்டி , சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோயிலில் செப்.23 முதல் செப்.26 வரை 4 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி அளித்தது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் அதிகாலை அதிகளவு வந்தனா்.

பின்னா் காலை 6.05 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்தனா். பக்தா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால்,பழம்,பன்னீா், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.

பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் நாகராஜன் (கூ.பொ)ஆகியோா் செய்திருந்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 ஆயிரம் போ் சுவாமி தரிசனம் செய்தனா். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் கூட்ட பக்தா்கள் நெரிசலில் சிக்கித் தவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT