விருதுநகர்

ஏழாயிரம் பண்ணையில் 23 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்

26th Sep 2022 12:23 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையில் 23 மூட்டை ரேசன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, எல்லம்மாள் காம்பவுண்டு தெருவில் ஒரு வீட்டு முன்பு தலா 50 கிலோ எடையுடன் 23 மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து ரேசன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதேநேரம் ரேசன் அரிசியைக் கடத்தியவா் தப்பி சென்ால், அது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போ லீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT