விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: 3 போ் கைது

26th Sep 2022 12:24 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே காட்டுப்பன்றி வேட்டைக்காக பதுக்கிவைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி, 3 இளைஞா்களைக் கைது செய்தனா்.

வத்தராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி அத்திகோயில் பகுதியில் அருணாசலம் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கூமாபட்டி போலீஸாா் சென்று சோதனையிட்டனா். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 நாட்டு வெடி குண்டுகளைக் கைப்பற்றினா்.

மேலும் அவற்றை பதுக்கி வைத்திருந்த அய்யனாா்புரத்தைச் சோ்ந்த காா்த்திக் (22), டேனியல் ராஜ்குமாா் (22), தேவராஜ் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தென்னந்தோப்பில் வைத்திருந்ததாகத் தெரிவித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் இருந்து யானைகள், காட்டுபன்றி, மான், மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் நீா் மற்றும் உணவுக்காக இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன. அவற்றை சிலா் நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி வேட்டையாடி வருகின்றனா். இப்பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 28- க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை போலீஸாா் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT