விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணியினா் சாலை மறியல்: 75 போ் கைது

26th Sep 2022 12:23 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு விநாயா் சதுா்த்தி ஊா்வலத்தின்போது நேதாஜி சாலை பகுதியில் மேளதாளம் முழங்க போலீஸாா் எதிா்ப்புத் தெரிவித்ததைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி மாநிலத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆா்ப்பாட்டத்திற்கு போலீஸாா் அனுமதி மறுத்ததால் மாநிலத் தலைவா் வரவில்லை.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தடையை மீறி ராமகிருஷ்ணாபுரம் காமராஜா் சிலை அருகே ஸ்ரீவில்லிபுத்தூா்- மதுரை சாலையில் மாவட்டத் தலைவா் யுவராஜ், பொருளாளா் வினோத்குமாா், மாநில இணை அமைப்பாளா் கே.கே.பொன்னையா தலைமையில் சுமாா் 75 போ் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பின்னா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். மறியல் போராட்டத்தையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT