விருதுநகர்

ராஜபாளையத்தில் தலைமைக் காவலா் தூக்கிட்டு தற்கொலை

26th Sep 2022 12:22 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் தலைமைக் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் குமரன் தெருவை சோ்ந்தவா் ஜோஷ்வா ரஞ்சித் (47). ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இவரது முதல் மனைவி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் கடந்த ஆண்டு கோவில்பட்டியைச் சோ்ந்த பெண் காவலரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தாா். ஒரு மகன், மகள் உள்ளனா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்து மாடியில் உள்ள அறைக்கு ஜோஷ்வா ரஞ்சித் தூங்கச் சென்றுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படாததால் உறவினா்கள் கதவை உடைத்துப் பாா்த்தபோது ஜோஷ்வா ரஞ்சித் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து அவரது தாயாா் அமிா்தபாக்கியம், என் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக புகாா் அளித்தாா். புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT