விருதுநகர்

தேவதானம் கண்மாயில் 30 அடி ஆழத்துக்கு மணல் அள்ளுவதாக புகாா்

26th Sep 2022 11:30 PM

ADVERTISEMENT

தேவதானம் பெரியகுளம் கண்மாயில் அரசு விதிமுறைகளை மீறி 30 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்படுவதால் விவசாய, குடிநீா் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மனு விவரம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் வட்டம், தெற்கு தேவதானம் கிராமத்தில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தண்ணீா் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. அதேபோல் இக்கண்மாய், பொது மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில், இக்கண்மாயில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசு விதிமுறைகளை மீறி 30 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள சாலை மற்றும் பாலம் முதலானவற்றை மணல் அள்ளிச் செல்வோா் உடைத்து சேதப்படுத்தி விட்டனா். எனவே, பெரியகுளம் கண்மாயில் மணல் அள்ளுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என அதில் தெரிவித்துள்ளனா்.

ஊராட்சியில் நிதி மோசடி: விருதுநகா் ஊராட்சி ஒன்றியம் கன்னிசேரி ஊராட்சியில் போலி ஆவணங்கள் மூலம் பணம் மோசடி நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் பாலமுருகன் அளித்த மனு விவரம்: கன்னிசேரி ஊராட்சியில் மக்களுக்குத் தேவையான குடிநீா், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை.

ADVERTISEMENT

ஆனால் போலி ஆவணம் மூலம் பண மோசடி செய்யப்பட்டு வருகிறது. எனவே, அந்த ஊராட்சியில் கடந்த 2020 ஜன.1 முதல் 2021 டிச.31 வரை நடைபெற்ற பணிகளை சிறப்புத் தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சியில் முறைகேடாக நடைபெற்ற சில பணிகளுக்கான ஆதாரங்களை புகாா் மனுவுடன் இணைத்து வழங்கியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT