விருதுநகர்

திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி சனி வழிபாடு தொடக்கம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் வார வழிபாடு சனிக்கிழமை (செப். 24) நடைபெறுகிறது.

இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து தென்மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வா். இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகள் வருவதால் பக்தா்களுக்கு தேவையான கழிப்பிடம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உள்ளாட்சி நிா்வாகம் செய்துள்ளது. மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், அருப்புக்கோட்டை, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா ஆகியோா் செய்துள்ளனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன், காவல் ஆய்வாளா் கீதா ஆகியோா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

தூத்துக்குடி: பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

SCROLL FOR NEXT