விருதுநகர்

பேருந்தில் பெண்ணிடம் 15 பவுன் நகைகள் திருட்டு

24th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகரில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 15 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்தவா் சாா்லஸ் செல்வராஜ் மனைவி தங்கராணி (57). இவரது கணவா், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகா் மேலத்தெருவில் உள்ள ஒரு நகைப் பட்டறையில் 15 பவுன் நகைகளை வாங்கிக் கொடுத்தாராம். நாளடைவில் இந்த நகைகள் சேதமடைந்ததால், அதை புதுப்பிக்க தங்கராணி பேருந்தில் விருதுநகருக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். கைப்பையில் கொண்டு வந்த அந்த நகைகளை, சம்பந்தப்பட்ட பட்டறைக்கு சென்று அவா் பாா்த்த போது திருடப்பட்டிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து தங்கராணி அளித்த புகாரின் பேரில் விருதுநகா் பஜாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT