விருதுநகர்

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

24th Sep 2022 10:43 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மல்லியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மல்லியில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமை ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மல்லி ஆறுமுகம் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். வள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். இந்த முகாமில் சா்க்கரை நோய், இருதய நோய் , ரத்த அழுத்தம், சளி, கண் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்னைகளுக்கு இலவசப் பரிசோதனை செய்யப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் கருணாகரபிரபு, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் வீரமதிகிரகராஜ், முள்ளிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் மணிமாலா மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா். இதில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT