விருதுநகர்

பட்டாசுத் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

24th Sep 2022 10:41 PM

ADVERTISEMENT

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளி வீட்டில் நகை மற்றும் பணம் திருடுபோனதாக சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி முருகன் காலனியைச் சோ்ந்த கணேசன் மனைவி செல்வமணி (42). பட்டாசுத் தொழிலாளியான இவா், தனது வீட்டை காலையில் வழக்கம் போல பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டு மாலை திரும்பி வந்துள்ளாா்.

அப்போது, வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 4 கிராம் மோதிரம் மற்றும் ரூ. 11 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT