விருதுநகர்

ராஜபாளையம் அருகே அரிசி ஆலையில் தீ விபத்து

24th Sep 2022 10:44 PM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே தனியாா் அரிசி ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை அணைத்தனா்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அம்மையப்பபுரம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவெ செயல்பட்டு வரக்கூடிய நவீன அரிசு அலையில் புதிதாக ஒரு யூனிட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேலையாள்கள் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த போது, கன்வயா் பெல்ட் பகுதியில் தீப்பொறி பரவி தீப்பிடிக்கத் தொடங்கியது. உடனடியாக ஆலை உரிமையாளா் சுந்தரவேல் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT