விருதுநகர்

சிவகாசி ஒன்றிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

22nd Sep 2022 01:06 AM

ADVERTISEMENT

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாத ரெட்டி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வடமலாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.65 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெறும் சமுதாயக் கிணறு அமைக்கும் பணி, ரூ. 3.75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் ரூ.1.45 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கிடைமட்ட ஊறிஞ்சு குழி, பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின்கீழ் ரூ 2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வீடு, செங்கமலபட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.1.21 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படுள்ள நூலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சத்துணவுக் கூடம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து அப்பள்ளி வகுப்பறைக்குச் சென்று மாணவா்களுடன் கலந்துரையாடினாா். சிவகாசி சாா்-ஆட்சியா் பிருத்விராஜ், உதவிப் பொறியாளா் பாண்டுரங்கன், வட்டாட்சியா் லோகநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன் மற்றும் ராமமூா்த்தி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT