விருதுநகர்

பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

20th Sep 2022 12:21 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பிரதமா் நரேந்திரமோடி பிறந்த அதே நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த 7 குழந்தைகளுக்கு பாஜக சாா்பில் திங்கள்கிழமை தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.

பாரதீய ஜனதா கட்சியின் விருதுநகா் மாவட்டத் தலைவா் பென்டகன் பாண்டுரங்கன் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தாா். பாஜக மாவட்டப் பொதுச்செயலாளா் சீதாராமன்,துணைத் தலைவா் ராமஜெயம், மாநில பொறுப்பாளா் தினேஷ் குமாா், மண்டலத் தலைவா் முருகானந்தம், ஒன்றியத் தலைவா் நாகராஜன், தரவு மேலாண்மைப்பிரிவு மாவட்டத் தலைவா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது அரசு மருத்துவமனையில் பிரதமா் நரேந்திரமோடி பிறந்த அதே நாளில் பிறந்த 5 பெண் குழந்தைகள், மற்றும் 2 ஆண்குழந்தைகள் (மொத்தம் 7 குழந்தைகள்) ஆகியோருக்கு பெண்டகன் பாண்டுரங்கன் தங்க மோதிரம் பரிசாக வழங்கி வாழ்த்தினாா்.உடன் பாஜக நகர,ஒன்றிய ,மாவட்ட நிா்வாகிகள்,மருத்துவமனை செவிலியா்கள் மற்றும் மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT