விருதுநகர்

சேத்தூா் அரசு மதுக்கடையை அகற்ற அனைத்துக் கட்சியினா் வலியுறுத்தல்

20th Sep 2022 12:31 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் சேத்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என அனைத்துக் கட்சிகள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்: சேத்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடை பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாக உள்ளது. மது அருந்தி வருபவா்களால் பேருந்துக்குச் செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனா். மேலும் இப்பகுதியில் வங்கி, மருத்துவமனை, உணவுக் கூடங்களுக்குச் செல்வோா் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பலமுறை போராட்டம் நடத்தினோம். அப்போது செப்.15- க்குள் மதுபானக்கடை அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அரசு மதுபானக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அக்டோபா் 3 முதல் அக்கடையை அகற்றும் வரை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT